தஞ்சாவூருக்கு வடக்கே 10 கி. மீ. தொலைவில் உள்ள திருக்கண்டியூரிலிருந்து மேற்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. இத்தலம் காவிரி நதிக்கும், குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் துருத்தி எனப்பட்டது. அப்பர் இங்கு திருமடம் அமைத்து உழவாரத் தொண்டு செய்தார். திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய தலம். திருஞானசம்பந்தர் வந்த பல்லக்கை அவர் அறியாவண்ணம் திருநாவுக்கரசர் தாங்கிய தலம். |